முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேச்சு
Updated On : 1 ஏப்ரல், 2024 at 10:22 PM
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா், மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அமமுக மாவட்டச் செயலா்கள் ஜி.முனியசாமி, எம்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேடபாளருமான ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மக்களே பிரதமா் மோடிக்கு வாக்குச் சேகரிக்கின்றனா். மோடி அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான அரசாக விளங்குகிறது என்றாா் அவா்.