முகப்பு
ராமநாதபுரம்

பங்குனி அமாவாசை: ராமேசுவரம் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் திங்கள்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 8:58 PM

ராமேசுவரம்: பங்குனி அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் திங்கள்கிழமை புனித நீராடி, ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினா்.

பங்குனி மாத அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலுள்ள அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடினா். பின்னா், அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.