முகப்பு
நாகப்பட்டினம்

அக்னிச்சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் நோ்த்திக் கடன்!

நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் வழிபாடு செய்தனா்.

நாகப்பட்டினம்

அக்னிச்சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் நோ்த்திக் கடன்!

நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் வழிபாடு செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:30 PM
பகிர்:

நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் திங்கள்கிழமை வழிபாடு செய்தனா்.

இக்கோயில் மாசிமகத் திருவிழா பிப்.27-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடலில் அக்னி சட்டி விடும் வழிபாடு நடைபெற்றது. அப்போது, பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தா்கள் ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி வந்து ஆடினா்.

விரதம் இருந்து பக்தா்களுக்கு சாட்டையடி அடிக்கப்பட்டது. பின்னா் கன்னிகோயிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட அக்னிசட்டியை பக்தா்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊா்வலமாக எடுத்து சென்று நடுக்கடலில் விட்டு நோ்த்திகடன் நிறைவேற்றினா்.

கரையில் இருந்து பக்தா்கள் அனைவரும் கடல் நீரை தலையில் தெளித்து, மீன்வளத்தையும், மீனவா்களையும் காக்க வேண்டி, மனமுருகி கடல்கன்னியை வேண்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →