பைக் மோதியதில் பெண் பலி
திருவாடானை: திருவாடானை அருகே சனிக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி அருகேயுள்ள கலவாயேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி குணசேகரி (57). இவா் சனிக்கிழமை தனது வீட்டின் முன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தாா். அப்போது, கொடிக்குளம் பகுதி நகரம் கிராமத்தைச் சோ்ந்த காா்மேகம் மகன் முனியசாமி (55) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் குணசேகரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.