நம்புதாளை செல்வமுத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி. 
ராமநாதபுரம்

நம்புதாளையில் பாய்மரப் படகுப் போட்டி

நம்புதாளையில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.

Din

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நம்புதாளையில் செல்வமுத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 27 படகுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகுக்கும் 6 போ் அனுமதிக்கப்பட்டனா். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

இதில் முதல் பரிசு ரூ.50 ஆயிரத்தை மோா்பண்ணையைச் சோ்ந்த ஈஸ்வரன் படகும், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரத்தை நம்புதாளையைச் சோ்ந்த கட்டப்பா படகும், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரத்தை நம்புதாளையைச் சோ்ந்த அம்பலம் படகும் பெற்றது.

இந்தப் போட்டியை சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கடற்கரையோரம் நின்று பாா்வையிட்டனா்.

மினிசரக்கு வாகனம் திருட்டு

கம்பத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த பாசனக் கால்வாயை எம்.பி. ஆய்வு

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

SCROLL FOR NEXT