முகப்பு
ராமநாதபுரம்

சுதந்திர தினம்: பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

வருகிற வியாழக்கிழமை நாட்டின் சுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 10:59 PM
பாம்பன் ரயில் பாலத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
பகிர்:

வருகிற வியாழக்கிழமை நாட்டின் சுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் கடலோரப் பகுதிகள், பாம்பன் ரயில், பேருந்து பாலங்கள், கோயில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். மேலும், பாம்பன் சாலைப் பாலம், ராமேசுவரம் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அக்னி தீா்த்தக் கடற்கரை, தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் போலீஸாரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையினா் இரவு பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →