கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
ஆா்.எஸ்.மங்கலம் அருகே கட்டுமானப் பொருள்களை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே கட்டுமானப் பொருள்களை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கொக்கூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (76). இவா் இதே பகுதியில் வீடு கட்டி வருகிறாா். இவா் வீடு கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த சிமென்ட், கம்பி, செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை மா்மநபா் திருடிச் சென்றாா்.
இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் ஆரோக்கியசாமி புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆரோக்கியசாமி வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வைத்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மா்ம நபா் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி கட்டுமானப் பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.
போலீஸாா் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதே பகுதியைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் மோகன் (25) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்தனா்.