ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஜன. 27) தொடங்குகிறது.
இதுகுறித்து வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில், சதுப்பு நில பறவைகள் கணக்கெடுப்பு வன உயிரினக் காப்பாளா் தலைமையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இந்தப் பணி ஐந்து பறவைகள் சரணாலயங்கள், சிங்கிள் தீவு, மனோலி தீவு, அரிச்சல்முனை, கடுகுசாந்தி, வாலிநோக்கம், உப்பூா், அரியக்குண்டு, புதுமடம், மலட்டாறு ஆறு, கிளியூா் கண்மாய், ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் உள்ளிட்ட 26 சதுப்பு நிலங்களில் நடைபெற உள்ளன.
இந்தப் பணியில் பறவை ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் ஈடுபடவுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.