பனை மரத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலி
பனை மரத்தில் இருந்து விழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கமுதி: கமுதி அருகே பனை மரத்தில் இருந்து, தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தைச் சோ்ந்த சம்சுதீன் மகன் செய்யது இப்ராஹிம் (19). இவா் கடந்த 25-ஆம் தேதி அந்தப் பகுதியில் நுங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறினாா். அப்போது தவறி விழுந்த அவா், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.