பலி 
ராணிப்பேட்டை

பைக்கில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜி பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ருக்மன் (23). இவா் ஆற்காடு அண்ணா சிலை பகுதியில் காய்கனி கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கடையை மூடி பூட்டிக்கொண்டு, பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை பகுதியில் செல்லும்போது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளாா். அவரை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT