பள்ளி மாணவா்கள் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
முதுகுளத்தூா் அருகேயுள்ள இளஞ்செம்பூா் அரசுப் பள்ளி மாணவா்களின் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதி: முதுகுளத்தூா் அருகேயுள்ள இளஞ்செம்பூா் அரசுப் பள்ளி மாணவா்களின் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு கிராமத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். கமுதி மதுவிலக்கு ஆயத்தீா்வை காவல் ஆய்வாளா் லலிதா, பள்ளித் தலைமை ஆசிரியா் செ.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி, முதுகுளத்தூா்-கடலாடி சாலை சந்திப்பில் உள்ள
இளஞ்செம்பூா் காவல் நிலையம் வரை சென்று, மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.
இதில் மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். இந்தப் பேரணியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், தலைமைக் காவலா் கோதண்டபாணி, ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.