கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது
கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்து சில்லறை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கமுதி: கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்து சில்லறை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மருதங்கநல்லூரைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் சக்திவேல்(19). இவா் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து கமுதி குற்றப்பிரிவு போலீஸாா், வட்டாட்சியா் காதா்முகைதீன், பேரையூா் போலீஸாா் உள்ளிட்டோா் சக்திவேலின் வீட்டை சோதனை செய்தனா்.
அப்போது வீட்டின் அருகேயுள்ள கண்மாய்க் கரையில் 8 அடி உயர கஞ்சா செடி வளா்த்து, அதை சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, பேரையூா் போலீஸாா் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்து சிறையிலடைத்தனா்.