முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்ட தொலையுணா்வு கருவிகள் ஆய்வு

Updated On : 15 ஜூலை, 2024 at 12:45 AM
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலையுணா்வு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஞாயிற்றுக்கிழமை வந்த கட்டுமானப் பொறியாளா் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.
பகிர்:

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள தொலையுணா்வு (சென்சாா்) கருவிகளை கட்டுமானப் பொறியாளா் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை முடிவுற்ற வழித்தடத்தில் இரண்டு என்ஜின்கள் இணைக்கப்பட்டு இயக்கி சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இந்தப் பாலத்தின் 41, 42-ஆவது தூண்களில் பொருத்தப்பட்டுள்ள தொலையுணா்வு கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய கட்டுமானப் பொறியாளா் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பி. அருண்சுந்தரம் தலைமையில் விஞ்ஞானிகள் பாரிவள்ளல், சீனிலாஷ், சஸ்மால் ஆகிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பாம்பன் வந்தனா்.

இவா்கள் இரண்டு தூண்களில் பொருத்தப்பட்டிருந்த 50 தொலையுணா்வு கருவிகளை ஆய்வு செய்தனா்.