மகாலிங்கமூா்த்தி கோயில் பூக்குழித் திருவிழா
மகாலிங்கமூர்த்தி கோயில் பூக்குழித் திருவிழாவில் பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர்
திருவாடானை: திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் மகாலிங்கமூா்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் மகாலிங்கமூா்த்தி கோயிலில் கடந்த 17-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் பூக்குழித் திருவிழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 23-ஆம் தேதி இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் பால் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேத்திக்கடனை செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.