முகப்பு
ராமநாதபுரம்

ஆவணங்களின்றி இயக்கிய ஆட்டோ பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2024 at 11:35 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:37 PM

சாயல்குடி அருகே உரிய ஆவணங்களின்றி, அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள கன்னிகாபுரி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி(33). இவா் தனது ஆட்டோவில் அதிகப்படியான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சாயல்குடியில் இருந்து மூக்கையூா் சென்றுள்ளாா். அப்போது அரண்மனை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஆட்டோவை மறித்து சோதனை இட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி, ஆட்டோவை ஓட்டி வந்ததும், போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகப்படியான பயணிகளை ஆட்டோவில் ஏற்றி வந்ததாகவும், முத்துப்பாண்டி மீது சாயல்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.