வாகன ஓட்டுநா் தற்கொலை
ராமேசுவரம்: கீழக்கரையில் வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்கு நாடாா் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (60). சரக்கு வாகன ஓட்டுநா். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனா். தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில், இவா் கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.