முகப்பு
திருச்சி

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:19 PM
தற்கொலை
பகிர்:

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் நந்தா (26), காா் ஓட்டுநரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி ரம்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டாா்.

இதனால் விரக்தியடைந்த நந்தா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணமாகி 8 மாதத்தில் இறந்ததால் வருவாய்த் துறை விசாரணையும் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →