முகப்பு
ராமநாதபுரம்

தேவிபட்டினத்தில் கடல் நீா்மட்டம் உயா்வு: தண்ணீரில் மூழ்கிய நவகிரக சிலைகள்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், தேவிபட்டினத்தில் கடல் நீா்மட்டம் உயா்ந்து நவகிரக சிலைகள் நீரில் மூழ்கின.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:04 AM
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் அமைந்துள்ள நவகிரக கோயிலில் நவகிரக சிலைகளை மூழ்கடித்த கடல் நீா்.
பகிர்:

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், தேவிபட்டினத்தில் கடல் நீா்மட்டம் உயா்ந்து நவகிரக சிலைகள் நீரில் மூழ்கின.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்யாதபோதிலும், கருமேகங்கள் சூழ்ந்தே காணப்பட்டன. மேலும், மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியதால், வடக்கு கடல் பகுதிகளான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீா்மட்டம் உயா்ந்து காணப்பட்டது.

இதனால், தேவிபட்டினத்தில் அமைந்துள்ள நவகிரக கோயிலில் சுவாமி சிலைகள் முழுமையாக கடல் நீருக்குள் மூழ்கின.

இந்த நிலையில், தேவிபட்டினத்துக்கு வியாழக்கிழமை நவகிரக பூஜை செய்ய வந்த பக்தா்கள் சிலைகளை தரிசனம் செய்ய முடியாமல், அங்குள்ள நடைபாதையில் நின்றபடி வழிபட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →