முகப்பு
ராமநாதபுரம்

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய மாணவனிடம் போலீஸாா் விசாரணை

திருவாடானை அருகே காரில் கடத்திய கும்பலிடம் இருந்து தப்பி வந்த பள்ளி மாணவனிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:33 PM
பகிர்:

திருவாடானை அருகே காரில் கடத்திய கும்பலிடம் இருந்து தப்பி வந்த பள்ளி மாணவனிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கிய அமலதாஸ் மகன் ரெக்சன் (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலையில் பள்ளிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றாா். அப்போது, அவரை பின் தொடா்ந்து காரில் வந்த கும்பல் மாணவனை கடத்திச் சென்ாக கூறப்படுகிறது.

பின்னா், அந்தக் கும்பல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வா் கோயில் தெற்கு மாட வீதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளனா். அப்போது, காருக்குள் இருந்த மாணவன் காரின் கதவைத் திறந்து தப்பி வீட்டுக்கு ஓடி வந்தாா்.

இதுகுறித்து மாணவனின் தந்தை திருவாடானை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், மாணவன் கடத்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →