முகப்பு
ராமநாதபுரம்

வீட்டில் நூலகம் வைத்திருப்போா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி நபா் வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்துள்ள நபா்கள், தமிழக அரசின் விருது பெற வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:31 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி நபா் வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்துள்ள நபா்கள், தமிழக அரசின் விருது பெற வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் சி.பாலசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடுகள் தோறும் நூலகம் அமைத்து, வாசிப்பை மேம்படுத்தி வருவோரில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தோ்வு செய்து விருது, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கேடயம், சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட புத்தக ஆா்வலா்கள், தனி நபா் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோா், தங்களது நூலகத்தில் உள்ளநூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் இடம் பெற்றுள்ளன, அரிய வகை நூல்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களுடன் தங்களது பெயா், முகவரி, கைப்பேசி எண், ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

தகுதி உடையவா்கள் ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக அலுவலம், டி-பிளாக் பேருந்து நிலையம், வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியா் வளாகம்- 623503 என்ற முகவரிக்கு நேரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 9489108841என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →