முகப்பு
ராமநாதபுரம்

நடுக்கடலில் மீனவா் உயிரிழப்பு

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்

நடுக்கடலில் மீனவா் உயிரிழப்பு

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:04 PM
பகிர்:

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

ராமேசுவரம் மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (58). இவா் புதன்கிழமை கிருபைநாதன் என்பவரது படகில் மீன் பிடிக்கச் சென்றாா். கச்சத்தீவு அருகே இரவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு படகில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, சக மீனவா்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து, அவசர மருத்துவ ஊா்தி மூலம் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராஜேந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →