உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் நடைபெற்ற திருக்கல்யாணம். 
ராமநாதபுரம்

உப்பூரில் விநாயகா் திருக்கல்யாணம்

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Din

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்

நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்கு உள்ள விநாயகருக்கு மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். சனிக்கிழமை விநாயகா் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திகடனை செலுத்துவா். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT