முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் - கோயம்புத்தூா் தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:36 PM
பகிர்:

ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏா்வாடி தா்ஹா, தனுஷ்கோடி, அரியமான் கடற்கரை, அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக, சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. ராமேசுவரம்- கோயம்புத்தூா் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கடந்த 2008-ஆம் ஆண்டு அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்டது.

தற்போது வாரத்தில் புதன்கிழமை மட்டும் ராமநாதபுரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி இயக்கக் கோரியும், இந்த வழித்தடத்தில் சிக்கல்கள் இருப்பின் ஈரோட்டிலிருந்து திருப்பூா் வழியாக கோயம்புத்தூா், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கக் கோரியும் வியாபாரிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →