அஇபாபி ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலா் நியமனம்
அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலராக ப. கீரந்தையைச் சோ்ந்த மு. வீரப்பெருமாள் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இவா் ஏற்கெனவே மாவட்ட அமைப்புச் செயலராக பொறுப்பு வகித்தாா். தற்போது ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலராக மு. வீரப்பெருமாள் நியமிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும், மாநிலப் பொதுச் செயலருமான பி.வி. கதிரவன் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து மு. வீரப்பெருமாளுக்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் பி. பூவலிங்கம்மாரி, தேசியக் கட்டுப்பாட்டுத் தலைவா் சி. முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.