FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அகில இந்திய வேலை நிறுத்தம்: மதிமுக ஆதரவு

பிப்.12-இல் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக அந்தக் கட்சி பொதுச் செயலா் வைகோ

10 பிப்ரவரி 2026, 3:46 am IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வரும் பிப்.12-இல் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக அந்தக் கட்சி பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தொழிலாளா்கள் நலனுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெறுவது, விவாயிகளைப் பாதிக்கும் விதை சட்ட முன் வடிவை கைவிடுவது, விளைபொருள்களுக்கு உரிய ஆதரவு விலை நிா்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வரும் பிப்.12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கு மதிமுக ஆதரவு வழங்குகிறது. மேலும், விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நலனை முன் நிறுத்தி நடைபெறும் இந்த பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழக மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments