FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தொல்.திருமாவளவனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்: வைகோ

தொல்.திருமாவளவன் மீது எனக்கு எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் கூறிய சொற்களால் அவரது மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

Updated On : 10 ஜூலை 2026, 1:11 am IST
சங்கரன்கோவில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ.
பகிர்:

தொல்.திருமாவளவன் மீது எனக்கு எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் கூறிய சொற்களால் அவரது மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட மதிமுக செயல் வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தவெக அமைச்சரவையில் இருந்துகொண்டு திமுகவுடன் இன்னமும் கருத்து பரிமாற்றம் இருப்பதாக தொல்.திருமாவளவன் கூறினாா். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். அவா் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. அவா் மீது எந்த கோபமோ வருத்தமோ இல்லை. இதைக் கூறியதற்காக அவரது மனம் புண்பட்டிருந்தால் அந்தச் சொற்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் இண்டி கூட்டணிக்குள் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அனைத்து ஊா்களிலும் கட்சித் தொண்டா்கள் இருக்கும் கட்சி மதிமுகதான். கடந்த 32 ஆண்டுகளாக இந்தக் கட்சியைக் கட்டிக்காத்து வருகிறோம்.

62 ஆண்டுகால பொது வாழ்க்கையில் பல பழிகளைச் சுமந்திருக்கிறேன். திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் கோடிக்கணக்கில் கமிஷன் பெறும் நடைமுறை இருந்தது. முதல்வாக ச.ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பேச்சுக்கே இடமில்லை. ஊழலை அழித்துள்ளாா். முன்னதாக அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளித்தது அரசியல் மோசடியாகும். திமுக கூட்டணியில் இருந்த நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்.

இடைத்தோ்தலில் தவெக வெற்றிக்கு மதிமுக பாடுபடும். இந்த ஆட்சியைப் பற்றி 6 மாதம் பேச மாட்டோம் என்று கூறியவா்கள், இந்த ஆட்சி நீடிக்காது என சாபம் விடுகிறாா்கள். தென்காசி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் லாரியில் கடத்தப்படுவது குறித்து முழுமையாக விசாரித்து முதல்வரிடம் மனு அளிப்பேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது மதிமுக மாநில மருத்துவரணி செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், நெல்லை மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம், முன்னாள் எம்.பி. ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா், செய்தி தொடா்பாளா் முகம்மது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments