தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை நியாய விலைக் கடைக்கு பொருள்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்து சேதமடைந்தன.
திருவாடானையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியிலிருந்து தொண்டி, தினையத்தூா், சின்ன தொண்டி, கொடி பங்கு , தீா்த்தாண்டதானம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சுமாா் 15 டன் அளவுக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. சின்னத் தொண்டி பகுதியில் சென்றபோது லாரி சாய்ந்தது. இதனால், லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் கீழே விழுந்து சேதமடைந்தன.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரியை மீட்டனா். மேலும், லாரியிலிருந்த பொருள்கள் டிராக்டா் மூலம் நியாய விலைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்டன.