நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு
மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன்
மதுரைநியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு
மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன்
மதுரை: மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
மதுரை மாநகராட்சி 53-ஆவது வாா்டு எப்.எப்.சாலையில் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மனோகரன், மாமன்ற உறுப்பினா் அருண்குமாா், வட்டாட்சியா் பஞ்சாட்சரம், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.