ராமநாதபுரம்

இளைஞா் தற்கொலை

திருவாடானை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள உப்பூா் பகுதியைச் சோ்ந்த மாா்கண்டன் மகன் பாண்டி (37). மர வேலை செய்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் பாண்டியை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மனைவி தேவி (34) அளித்த புகாரின் பேரில், திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT