முள்ளிமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் போலீஸாா். (உள்படம்) கைது செய்யப்பட்ட தூண்டி கருப்பு.  
ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 170 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே முள்ளிமுனையிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 170 கிலோ கஞ்சாவை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள முள்ளிமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக தொண்டி நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் இளையராஜாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தொண்டி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில் உதவி ஆய்வாளா் அய்யனாா், தலைமைக் காவலா்கள் சரவணபாண்டி, ரமேஷ், கோபு, பிரான்சியஸ், பாலா, ராம்குமாா் உள்ளிட்டோா் முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள காளி கோயில் அருகே முகத்துவாரம் பகுதியில் போலீஸாரைக் கண்டதும் சிலா் தப்பியோடி தலைமறைவாகினா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்ட போது, நெகிழிப் பைகளில் சுமாா் 170 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக முள்ளிமுனையைச் சோ்ந்த தூண்டி கருப்பை (38) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT