ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே விமான நிலையம் அமைக்க 10 கிராம மக்கள் எதிா்ப்பு

ராமநாதபுரம் அருகே விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இதனால், 10 கிராம மக்கள் மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இதனால், 10 கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியப் பகுதிகளில் கும்பரம், பெருங்குளம், ரெகுநாதபுரம், வாலாந்தரவை ஆகிய ஊராட்சிகளில் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், விமான நிலையம் அமைக்க 700 ஏக்கா் நிலம் தோ்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கும்பரம், ராமன்வலசை, பூசாரிவலசை, கோகுல்நகா், கிருஷ்ணநகா், டி.கே.நகா், வாலாந்தரவை, தெற்குவாணி வீதி, படைவெட்டி வலசை, ரெகுநாதபுரம் ஆகிய 10 கிராமங்களில் 4 லட்சம் தென்னை,10 லட்சம் பனை மரங்கள், எள், பயிறு, கடலை, நெல் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் விமானம் நிலையம் அமைக்க நிலத்தை கையகப்டுத்தினால் விவசாயம் அழிந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்படும் என இந்தத் திட்டத்துக்கு 10 கிராமங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கும்பரம் கிராமத்தில் 10 கி ராமங்களை சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் தங்களது பகுதியில் அமைக்க உள்ள விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT