முகப்பு
திருப்பூர்

வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு: பல்லடம் வட்டாட்சியரிடம் மக்கள் முறையீடு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:09 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:52 PM

இச்சிப்பட்டியில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

பல்லடம் வட்டம், இச்சிப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 68 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில் தகுதியான பயனாளிகள் சிலா் மட்டுமே உள்ளனா். மற்றவா்கள் வெளியூரைச் சோ்ந்தவா்கள் என்றும், இலவச வீட்டுமனைப் பட்டா பெற தகுதியுடையவா்கள் அல்ல என்றும் கிராம மக்கள் கூறுகின்றனா். முறைகேடாக பலருக்கு வழங்கப்பட்டுள்ளதால் குளறுபடிகள் உள்ளன.

இச்சிப்பட்டியில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷிடம் கோரிக்கை மனுவை இச்சிப்பட்டி கிராம மக்கள் வழங்கினா்.

Advertisement

இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று வட்டாட்சியா் அளித்த உறுதிமொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.