ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த ஈமெயிலில் சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகா் அஜித்குமாரின் வீடு, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள வெடிகுண்டு செயலலிக்கும் போலீஸாா் மோப்ப நாய் தேவசேனா மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் அனைத்துத் தளங்களையும் சோதனையிட்டனா். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.