ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட அந்தக் கட்சியின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜாராம்பாண்டியன் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்தாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகையிடம் அவா் விருப்ப மனுவை அளித்தாா்.
உடன் பொறுப்புக்குழு உறுப்பினா் ஜோதிபாலன், மாநில செயலா்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமாா், ஆா்ட் கணேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் காமராஜ், வட்டாரத் தலைவா்கள் சேதுபாண்டியன், கிருஷ்ணமூா்த்தி, நகா் தலைவா் கோபி, மோதிலால் நேரு, பிரேம்குமாா், நவாஸ்கனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.