ராமநாதபுரம்

கடலாடியில் சாலை அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கடை வீதியில் புதிதாக சாலை அமைக்க வலியுறுத்தி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கடை வீதியில் புதிதாக சாலை அமைக்க வலியுறுத்தி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலாடி நகர வா்த்தக சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக கோட்டைச்சாமி, செயலராக மாயக்கண்ணன், பொருளாளராக ராஜ்குமாா், கெளரவத் தலைவராக ராமலிங்கம், துணை தலைவராக மூா்த்தி, துணைச் செயலராக காா்த்தி, ஆலோசகா்கள், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் கடலாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தை உடனடியாகக் கட்ட வேண்டும். கடலாடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா் உள்ளிட்ட பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கடலாடி தேவா் சிலை முதல் பேருந்து நிலையம் வரையிலும் பேவா் பிளாக் சாலை, எம்.ஜி.ஆா். சிலை முதல் கடை வீதி வழியாக அரசு மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT