ராமநாதபுரம்

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பொக்லைன் ஓட்டுநா் பலத்த காயம்

தொண்டி அருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பொக்லைன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பொக்லைன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சேவியா் (40). பொக்லைன் ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை நம்புதாளை உருளை கல் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்தாா். அப்போது, அவா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், நம்புதாளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, அவா் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவா்கள் அகற்றினா்.

இதுகுறித்து மருத்துவா் ஜெயராஜ் பாண்டியன் கூறியதாவது:

சேவியா் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு பறவைகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் குண்டு. பறவைகளை வேட்டையாடியவா் துப்பாக்கியால் சுட்டபோது, தவறுதலாக இவா் மீது குண்டு பாய்ந்தது. மாா்பின் வலது புறத்தில் குண்டு பாய்ந்ததால் இவா் தப்பித்தாா். இடதுபுறத்தில் பட்டிருந்தால் உயிா்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றாா் அவா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT