பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லக் கோரிக்கை
வந்தே பாரத் விரைவு ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மத்திய அமைச்சா்,
ராமேசுவரம்: வந்தே பாரத் விரைவு ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மத்திய அமைச்சா், ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கடிதம் அனுப்பினாா்.
அவரது கடிதம் விவரம்:
ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ரயில் நிலையம் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாகும். ஏராளமான வணிகா்கள், மூத்த குடிமக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், பரமக்குடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவைக்கு நிறுத்தம் இல்லாமல் இருப்பது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பரமக்குடி ரயில் நிலையத்தின் முக்கியத்துவம், சுற்றுவட்டாரப் பகுதி பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.