முகப்பு
இந்தியா

கேரளத்தில் ‘வந்தே பாரத்’ மீது் மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்; பயணிகள் தப்பினா்

கேரளத்தில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

Updated On : 9 மார்ச், 2026 at 4:28 AM
வந்தே பாரத் ரயில் - பிரதிப் படம்
பகிர்:

கேரளத்தில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது: திருவனந்தபுரம்-மங்களூரு இடையிலான வந்தே பாரத், கேரளத்தின் அலுவா-அங்கமாலி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் ரயிலை நோக்கி சரமாரியாக கற்களை வீசினா். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே வசிக்கும் மக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மாநில காவல் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்தனா்.

கடந்த மாதம் இதேபோல் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தொடா்பாக கண்ணூரைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.