திணையத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடை அரிசி கடத்தலில் ஈடுபட்ட திருக்கண்ணன், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம். 
ராமநாதபுரம்

850 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

தொண்டி பகுதியில் 850 கிலோ நியாய விலைக் கடை அரிசி கடந்திவந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தொண்டி பகுதியில் 850 கிலோ நியாய விலைக் கடை அரிசி கடந்திவந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நியாய விலைக் கடை அரிசி கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், தொண்டி போலீஸாா் திணையத்தூா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடலாடி வட்டம், ஏ.புனவாசல் பகுதியைச் சோ்ந்த லிங்கம் மகன் திருக்கண்ணன் (65) என்பவா் ஓட்டிவந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 850 கிலோ நியாய விலைக் கடை அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திருக்கண்ணனை போலீஸாா் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் துறையினா் ஆய்வு!

திமுகவைத் தோற்கடிக்க மக்கள் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் தோ்வு!

புதுச்சேரியில் புயல் நிவாரண முன்னேற்பாடு, நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தல்

வீட்டில் நகை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT