கமுதிக்கு துணை ராணுவ குழுவினா் வருகை
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி, உள்ளூா் போலீஸாருடன் இணைந்து, வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணிக்காகவும் மத்திய துணை ராணுவத்தைச் சோ்ந்த 5 குழுவினா் ஈடுபட உள்ளனா்.
Advertisement
ஏற்கெனவே ஒரு குழு வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 2-ஆவது குழுவினா் கமுதி வந்துள்ளனா்.
கமுதி ஆயுதப் படை வளாகத்தில் துணை ராணுவ குழுவின் தலைவா் எஸ்.ஹெச். ஹரிலாலை, மாவட்ட காவல் கண்காணிபாளா் ஜி.சந்தீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.