அஇபுமமுக வேட்பாளா் கமுதியில் வாக்கு சேகரிப்பு
முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் கமுதி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் கமுதி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கமுதி, வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, தோப்படைப்பட்டி, அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தொன்னந்தோப்பு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
கமுதி பேருந்து நிலையத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
உங்களில் ஒருவரான என்னை தோ்ந்தெடுத்தால் முதுகுளத்தூா் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் அமைக்கப்படும். நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்தப்படும். புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ள முண்டு மிளகாய்க்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மிளகாய் பதப்படுத்தும் சேமிப்புக் கிடங்கு, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். இந்த தொகுதியில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா் அவா்.