ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்
ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:07 PM
ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி காவல் துறை சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு காரில் வந்தவா்களை தோ்தல் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.