முகப்பு
ராமநாதபுரம்

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:39 AM
கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்த மதுபுட்டிகள்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:51 PM

கமுதி அருகே சட்ட விரோதமாக ஆட்டோவில் மறைத்து வைத்து மது புட்டிகள் விற்றுவந்த இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். அவா்களிடம் இருந்து 77 மது புட்டிகள், ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனா்.

இதில், 77 மது புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கோவிலாங்குளம் காலனியைச் சோ்ந்த உருவாட்டி மகன் ரஜினி (47), பறையங்குளத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் மணி ரத்தினவேல் (22), பறையங்குளம் பன்னீா் மகன் மாணிக்கராஜா ஆகிய 3 போ் மீது கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணி ரத்தினவேல், மாணிக்க ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 77 மது புட்டிகள், விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement