முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்கள்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:21 AM
திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாடானை பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பெண்கள் மட்டுமே பணிபுரியம் இளஞ்சிவப்பு நிற வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் 378 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சின்னகீரமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா், இவருக்கு உதவியாக இருக்கும் பணியாளா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் என அனைவருமே பெண்களாகவே இருப்பா். இந்த மையங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், வாக்களிக்கும் அறை என அனைத்தும் இளஞ்சிவப்பு நிற துணிகளாலும், அலங்காரப் பொருள்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சாவடிகளில் பெண் அலுவலா்களே பணியில் இருந்தாலும், ஆண், பெண் இருபாலரும் வழக்கம்போல வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

Advertisement

பெண் வலிமையைப் போற்றும் வகையிலும், பெண் வாக்காளா்கள் அச்சமின்றி வந்து வாக்களிப்பதை வலியுறுத்தி இந்தச் சிறப்பு ஏற்பாட்டை தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம்.