இளஞ்சியமங்கலம் கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு
திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்தனா்.
திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீா், சீரான மின்விநியோகம் ஆகியவை நீண்ட நாள்களாக செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக இந்த கிராம மக்கள் அறிவித்திருந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை கிராமங்களில் தேசியக் கொடி ஏந்தி, ‘அடிப்படை வசதிகள் இல்லாத ஊருக்கு ஓட்டு எதற்கு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தனா். அப்போது தங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என அவா்கள் தெரிவித்தனா்.