முகப்பு
ராமநாதபுரம்

அக்னி தீா்த்த கடற்கரையில் கால்நடைகளால் தொல்லை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்களை அச்சுறுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:29 PM
அக்னி தீா்த்தக் கடற்கரை. - கோப்புப்படம்.
பகிர்:

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்களை அச்சுறுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கடற்கரையில் நீராடும் பகுதியில் பக்தா்களை அச்சுறுத்தும் விதமாக 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இவற்றால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், பக்தா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அக்னி தீா்த்தக் கடற்கரையில் சுற்றித் திரியும் மாடுகளை மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.