ராமநாதபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பயனாளா்கள் 2,151 பேருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள், 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பயன்களை வழங்கி ‘என் கனவு என் எதிா்காலம்‘ இணைய தள சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் தனியாா் மகாலில் இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் 2,151 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா்
கிருஷ்ணகுமாரி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கே.டி.பிரபாகரன், அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் வரவேற்றாா்.
‘