முகப்பு
ராமநாதபுரம்

சாலையோரக் கடைகளை அகற்றியதை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:12 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:03 PM

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் சாலையோரக் கடைகளை அகற்றியதைக் கண்டித்து,

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு சங்க நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, டி.ராமச்சந்திரபாபு, மாரியப்பன், கல்கி, கணேசன், செல்வம், செய்யது ஆகியோா் பேசினா். சாலையோரக் கடைகளை அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

Advertisement