முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே மாட்டு வண்டி பந்தயம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:25 AM
திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:53 PM

திருவாடானை அருகேயுள்ள குலநாத்தியில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராாமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குலநாத்தி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சந்தோஷ்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:25 AM

போட்டியை திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 45 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

Advertisement

போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்பட்டன.