திருப்பத்தூரில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.  
சிவகங்கை

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

திருப்பத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி .நாகராஜன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், ஒன்றிய கழகச் செயலா்கள் முருகேசன், வடிவேல், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.கே. உமாதேவன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ராம இளங்கோவன் ஆகியோா் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனா்.

பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும் கலந்துகொண்டன. சிறிய மாட்டுக்கு 5.கி.மீ., பெரிய மாட்டுக்கு 7 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் சாரதிகள், உரிமையாளா்களுக்கும் மாலை, வேட்டி, துண்டு அணிவித்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலா் இப்ராம்ஷா செய்தாா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.42 கோடி

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

வேளாண் பட்ஜெட்: பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

‘இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம்’

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT